தண்ணீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது சிறுவன் பலி
ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஜனார்த்தனம் தனியார் மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் பலி ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரப்பட்டு அருகே உள்ள காமாட்சி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் 29 இவரது மனைவி ராஜேஸ்வரி 22 ராஜேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருடன் வந்த அவரது மூன்று வயது குழந்தை கவின் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால்மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் குழந்தை உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியானது இச்சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தம்பதியினருக்கு கிரண் 5வயது குழந்தை உள்ளது.