துறையூர் : குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

துறையூர் பாலக்கரை பகுதியில் நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.;

Update: 2024-04-05 01:40 GMT

பைல் படம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார் இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 12 ம் வகுப்பு படித்து முடித்த உறவு பெண்னிற்க்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதல் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்வதற்காக துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

Advertisement

இந்நிலையில் நேற்று மாலை நிச்சயதார்த்தம் போன்ற திருமண சம்பிரதாயங்கள் மண்டபத்திலே நடந்துள்ளது. இரவு மணமகன் மற்றும் மணமகள் இரு வீட்டாரும் மண்டபத்தில் தங்கி உள்ளனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நள்ளிரவில் அதிகாரிகள் திருமண மண்டபத்தில் நுழைந்து மணமகள் மற்றும் மணமகன் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் மணமகள் இன்னும் திருமண வயது எட்டவில்லை எனவும் திருமண வயதிற்கான காலம் 60 நாட்கள் உள்ளதாகவும் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Tags:    

Similar News