மரக்காணம் அருகே கடற்கரை பகுதியில் தீர்த்தவாரி விழா

தீர்த்தவாரி விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு.

Update: 2024-02-24 17:57 GMT

தீர்த்தவாரி திருவிழா

மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் பகுதியில் மாசி மக திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்றது. 

ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் பௌர்ணமி அன்று கடல் மற்றும் புனித நீர்நிலைகளில் நீராடினாள் பாவங்கள் நீங்கி புன்னியம் கிடைக்கும் என கருதுகின்றனர். அந்த வகையில்  மரக்காணம் ஒன்றியத்துக்குட்பட்ட கூனிமேடு நொச்சிக்குப்பம், கொஞ்சிமங்கலம், செய்யாங்குப்பம், முதலியார்குப்பம், நடுக்குப்பம் உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாசிமகம் கோலாகலமாக நடைபெற்ரது. கிராமஞ்களில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக தாரை தப்பட்டை முழங்க எடுத்துவரப்பட்டது.

இதுபோல் ஊர்வலமாக வந்த சுவாமிகளுக்கு கூனிமேடு மீனவர் கடற்கரைப் பகுதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் கடல் நீரைக் கொண்டு சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூனிமேடு மீனவர் கிராம பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News