திண்டிவனத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - மர்ம மரணம் என கூறி உறவினர்கள் போராட்டம்

அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்ததாக புகார்

Update: 2024-02-16 16:01 GMT

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முருங்கப்பாக்கம் மாணிக்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அபிநயா (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அபிநயாவுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அபிநயா வீட்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் ரோசணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அதற்கு அபிநயாவின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் அபிநயாவின் உடலை திண்டிவனம் அரசு மருத்துவமனையிலையே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களிடம் முன்னாள் எம்.எல்.ஏ.சேதுநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து அபிநயாவின் உடலை பிரேத பரிசோத னைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 5 ஆண்டுகளில் அபிநயா இறந்ததால், அவரது சாவு குறித்து ஆர்.டி.ஒ.மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News