நெல்லை : ஆயன்குளம் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
ஆயன்குளம் பள்ளியில் புனித இஞ்ஞாசியார் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-27 15:15 GMT
அரசுப் பள்ளியில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து ஆயன்குளம் பள்ளியில் புனித இஞ்ஞாசியார் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் நிர்மலா லூயிஸ், தலைமை ஆசிரியர் வசந்திமேரி ப்ரெண்டா, சித்த மருத்துவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.