திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கல்யாணம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி, தவள வெண்ணகையாள் அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-04-21 08:24 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள அருள்மிகு தவள வெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து ஆகம விதிப்படி யாகம் வளர்த்து மங்கள வாத்தியம் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு தவள வெண்ணகையாள் அம்பாளுக்கும் பாலைவன நாதசுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சியும் திருமண விருந்தும் நடைபெற்றது விழாவில் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ் தக்கார் லட்சுமி பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா சக்திவேல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பானுமதி துரைக்கண்ணு மற்றும் விழா குழுவினர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News