திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர்கள் பில்லூர் அணையில் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் கோவை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பில்லூர் அணையில் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2024-03-22 12:32 GMT

ஆய்வு செய்த கமிஷனர்கள்

திருப்பூர் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையிலிருந்து புதிய குடிநீர் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கோடைகாலத்தினை முன்னிட்டு பில்லூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டினை உயர்த்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி அணையினை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர்மட்டம் குறித்து தொடர்புடைய அலுவலரிடம் கேட்டறிந்தார்கள்.

உடன் உதவி ஆட்சியர் பயிற்சி ஆசிக்அலி, மாநகர பொறியாளர்கள் முருகேசன், இளங்கோவன்,கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் பிரபாகரன், சத்தியமூர்த்தி, ராஜகோபால்,நாசர், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரேம்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News