திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம்

திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல கூட்டம் மண்டலத் தலைவர் இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-02-20 16:12 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருப்பூர் 4வது மண்டலம், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள புதிய 4ம் மண்டல அலுவலகத்தில்  நடைபெற்றது. மாமன்ற கூட்டத்திற்கு 4வது மண்டல தலைவர் இல. பத்மநாதன்  தலைமை தாங்கினார்.

  மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4 வது மண்டல உதவி ஆணையாளர் வினோத், செல்வ விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் 15 வார்டு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர் இல.பத்மநாதன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பேசுகையில் 200முதல் 271 வரை உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அடிப்படையான குடிநீர் பிரச்சனை, தார் சாலை ,தெரு விளக்கு,  சாக்கடை கால்வாய், திடக்கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவிளக்கு பிரச்சனை தொடர்ந்து குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.

தெருவிளக்கு பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும். கோடை காலம் தொடங்கும் முன்பாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் மேலும் குடிநீர் விநியோகம் தடை இல்லாமல் வழங்கவும் அதிகாரிகள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மாமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். அடிப்படையான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் 4 ம் மண்டல அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News