திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.;
மோர் அருந்தும் மாவட்ட ஆட்சியர்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது இதனை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது மேலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை பொருட்டு தமிழக அரசு பொதுமக்கள் அதிகக்கூடும் இடங்களில் நீர் நீர்மோர் மற்றும் ஓ ஆர் எஸ் பொடிகளை வழங்க உத்தரவிட்டது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சேவைகளை பெற வரும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக இலவச நீர்மோர் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
இதேபோல் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர்மோர் மற்றும் ஓ ஆர் எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் இலவச தண்ணீர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.