திருப்பூரில் 701.60 மி.மீ., மழை

திருப்பூரில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 701.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-01-11 07:15 GMT

 திருப்பூரில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 701.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 701.60 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நீர்நிலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விவரம் வருமாறு: திருப்பூர் வடக்கு பகுதி 8 மி.மீ, குமார்நகரில் 31 மி.மீ, தெற்கு பகுதியில் 8 மி.மீ, பல்லடம் ரோட்டில் 20 மி.மீ, அவினாசியில் 17 மி.மீ, ஊத்துக்குளியில் 14 மி.மீ, மடத்துக்குளத்தில் 45 மி.மீ, தாராபுரத்தில் 35 மி.மீ, மூலனூரில் 18 மி.மீ, குண்டடத்தில் 1 மி.மீ, உப்பாறு அணைப்பகுதியில் 50 மி.மீ, நல்லதங்காள் ஓடைப்பகுதியில் 20 மி.மீ, உடுமலையில் 31 மி.மீ, அமராவதி அணைப்பகுதியில் 118 மி.மீ, திருமூர்த்தி அணைப்பகுதியில் 103 மி.மீ, காங்கேயத்தில் 4 மி.மீ, வெள்ளகோவிலில் 34 மி.மீ, வட்டமலைக்கரை ஓடைப்பகுதியில் 25.60 மி.மீ, பல்லடத்தில் 23 மி.மீ என்பது உள்பட மாவட்டம் முழுவதும் 701.60 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. இதன் சராசரி 35.08 மில்லி மீட்டர் ஆகும்.

Tags:    

Similar News