திருப்புட்குழி கோவிலில் தெப்போற்சவம் விமரிசை
திருப்புட்குழி கோவிலில் நடந்த தெப்போற்சவத்தை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.;
Update: 2024-02-14 07:46 GMT
திருப்புட்குழி கோவிலில் நடந்த தெப்போற்சவத்தை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மூன்று நாள் தெப்போற்சவவிழா, பிப்.,9ம் தேதி வெகுவிமரிசையாக துவக்கியது. நேற்று தெப்போற்சவம் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் தெப்பலில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என, கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டு சென்றனர்.