தேசிய அளவிலான போட்டிகளில் திருத்தணி அரசு பள்ளிகள் சாதனை

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் திருத்தணி அரசு பள்ளிகள் சாதனை படைத்துள்ளன.

Update: 2024-06-05 10:59 GMT

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் திருத்தணி அரசு பள்ளிகள் சாதனை படைத்துள்ளன.


கோவா மாநிலத்தில், யூத் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் பெடரேஷன் சார்பில், கடந்த 27ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்த தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வாலிபால், கிரிக்கெட், கபடி, கால்பந்து, பாட்மிண்டன், யோகா, தடகளம் ஆகிய போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் தமிழக அளவில் மொத்தம், 69 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள், 19 பேர் உடற்கல்வி ஆசிரியர் டி.சீனிவாசன், பயிற்சியாளர்கள் சுரேஷ், ராகுல் மற்றும் சூர்யா ஆகியோருடன் சென்று விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடினர். போட்டியில், வாலிபால், கிரிக்கெட், கபடி,கால்பந்து, பாட்மிண்டன், யோகா, தடகளம் ஆகிய அனைத்து போட்டிகளிலும் திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றனர். தொடர்ந்து விளையாட்டு குழு சார்பில், மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News