தமிழகம், புதுச்சேரி மாநில அஞ்சல் வாக்குகளை பிரிக்க இன்று நடவடிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பதிவான அஞ்சல் வாக்குகளைப் பிரிக்க திருச்சியில் இன்று சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-30 03:35 GMT

  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பதிவான அஞ்சல் வாக்குகளைப் பிரிக்க திருச்சியில் இன்று சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ஏப்.17, 18 ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கிட திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொதுவான சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் இந்த மையம் அமைத்திட உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பணிகள் தொடங்கும். அஞ்சல் வாக்குகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்கள் முன்னிலையில் உரிய காவல்துறை பாதுகாப்புடன் தொடா்புடைய தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பிரித்து வழங்கிடும் பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

Tags:    

Similar News