அக்னிபாத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க......

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டுக்கான தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-02-25 09:41 GMT

மாவட்ட ஆட்சியர் 

திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டுக்கான தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News