கோடை அனலில் இருந்து தப்பிக்க ...
கோடை அனலில் இருந்து தப்பிக்க .... கோடைக்காலத்தில் நாகை உணவு பாதுகாப்பு அலுவலர் தகவல்.
Update: 2024-04-18 06:29 GMT
கோடைக்காலத்தில் உடலுக்கு அதிகமாக தேவைப்படுவது நீர்ச்சத்து மற்றும் உப்புச் சத்துமேயாகும். உணவு மூலம் பரவக்கூடிய கிருமிகள், ரசாயன சுவை மற்றும் நிறம் கூட்டிகளால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில அறிவுரைகள் கவனிக்க வேண்டியவை 1. உணவு பாதுகாப்புத்துறை உரிமம் / பதிவுச் சான்று பெற்ற கடைகளில் மட்டும் உணவை வாங்கவும் 2.கடையும், கடை இருக்கும் பகுதியும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும். 3. விற்பனையாளரும், பழச்சாறு தயாரிப்பவரும் தன் சுத்தம் மற்றும் கைச் சுத்தம் பேணுகினன்றனரா என்பதை கவனிக்கவும். 4. குளிர்பானம், பழச்சாறு செய்ய பயன்படுத்தும் பழம், பால், தண்ணீர் போன்ற மூலப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். 5. கூழ், மோர்,பால், தண்ணீர் போன்றவை துருபிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்க வேண்டும் 6. பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகள் நன்னீரில் செய்தவையாக இருக்க வேண்டும். 7. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்பட வேண்டும். 8. தூசிபடாதவாரும், ஈக்கள், பூச்சிகள் மொய்காதவாரும் மூடி வைத்திருக்கும் பழங்கள், பழச்சாறு, பழத்துண்டுகள் மற்றும் ப்ரூட் சாலட்டுகளை மட்டுமே உபயோகிப்பாளர்கள் வாங்க வேண்டும். 9. பழங்கள் சூரிய ஒளி / வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும், சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகக்கூடியவையாகும். எனவே பழச்சாறு தயாரிக்கும் கடைகளில் பழங்களை சூரிய ஒளி / வெப்பம் படாதவாறு குளிர் பெட்டி அல்லது குளிர் சாதனப் பெட்டிகளில் வைத்திருக்க வேண்டும். 10. பாட்டில் குடிநீர், அடைக்கப்பட்ட பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் எண், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முகவரி உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். 11. பழச்சாறு / குளிர்பான நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் தரமானதாக இருக்க வேண்டும். 12. பழச்சாறு, குளிர்பானங்களில் உபயோகிக்கப்படும் சர்க்கரை , சர்க்கரை பாகு உள்ளிட்டவை தண்ணீர் படாதவாறு மூடிவைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்பட வேண்டும். 13. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜூஸ் வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். 14. பழரசம், குளிர்பானம், மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைபடா வண்ணம் எடுக்க நீளமான கரண்டி உபயோகிக்க வேண்டும். 15. கரும்பச் சாறு எடுக்க பயன்படும் கரும்பு தோல் சீவப்பட்டும் நூனிகள் வெட்டப்பட்ட பின்பும் பயன்படுத்த வேண்டும். 16. கூழ், குளிர்பானங்கள், பழச்சாறுகள் கண்ணாடி டம்ளர் அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். காகித ஸ்டிராக்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அவையும் தூசி படாமலும் ஈ மொய்க்காமலும் இருக்க வேண்டும்.. 17. குப்பைகள் முறையாக போட்டு ஒழுங்காக அப்புரப்படுத்த வேண்டும். 18. அழுகிய நிலையில் உள்ள பழங்களை பயன்படுத்தக் கூடாது. சர்ப்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நீலம் மற்றும் ஊதா நிறங்களை சேர்க்கக்கூடாது. அதிகமான நிறங்கள் ரசாயன சுவையூட்டி கலந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஐஸ் கட்டிகளை வைக்கோல் , சணல் போன்றவை கொண்டு சுகாதாரமற்ற நிலையில் பயன்படுத்தக் கூடாது. குளிர்பானங்களை நேரடியாக குளிர்பதன பெட்டிகளிலிருந்து வாங்குவது நல்லது. ஐஸ் கட்டிகள் போட்டு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி கோடையை நோய்நொடியின்றி மகிழ்வாக அனுபவிக்க வேண்டுகின்றோம். உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற உணவு பாதுகாப்பு ஆணையரக எண்ணில் தெரிவிக்க வேண்டுகின்றோம்.