இந்தியா கூட்டணி ஆட்சியில் சுங்கச்சாவடிகள் மாற்றப்படும் - உதயநிதி

இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் மாற்றப்படும் என தக்கலையில் நடைபெற்ற பிரசாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.;

Update: 2024-04-11 16:35 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து தக்கலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறும் போது,கடந்த முறை தேர்தலில் நமது எதிரணியினர் ஒரே அணியாக இருந்தனர் ஆனால் இந்த முறை நம்மளை எதிர்க்கிறவர்கள் தனி தனியாக பிரிந்து வருகின்றனர் ஆதலால் கடந்த முறை விஜய் வசந்தை ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ததை விட இந்த முறை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.மூன்று ஆண்டுகளில் திமுக அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.

Advertisement

கலைஞர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக்கை வெளியிடுவார் சொல்வதை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என சொல்வார் அவர் வழியில் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் செயல்படுகிறார்.கடந்த 2016 ஆம் ஆண்டு கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது தற்போது 1200 ஆக உள்ளது.இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கேஸ் சிலிண்டர் விலை 500 தருவதாக தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் மாற்றப்படும்.என அவர் பேசினார்.

Tags:    

Similar News