நேற்று விட தக்காளி விலை ரூபாய் 5 குறைவு

சங்கரன்கோவிலில் நேற்று விட தக்காளி விலை ரூபாய் 5 குறைந்து காணப்பட்டது.

Update: 2024-06-28 06:43 GMT

தக்காளி விலை 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர் சந்தையை பொறுத்தவரையில் பொதுவாக கீரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படும் அதில் இன்று ஒரு கட்டு கீரை 20 ரூபாய்க்கும், தக்காளியின் விலை 5 ரூபாய் குறைந்து கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய்க்கும் அதே போல கத்திரிக்காய் விலை 5 ரூபாய் குறைந்து 35 ரூபாய்க்கும், அதேபோல பல்லாரி தரத்தை பொறுத்து 50, 45, 35 ஆகிய ரூபாய்களுக்கும், சின்ன வெங்காயம் முதல் தரம் 70 ரூபாய்க்கும், அதே போல தரத்தை பொறுத்து 65, 50 ஆகிய ரூபாய்களுக்கும் விற்பனையாகி வருகிறது.

வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவை தலா 10 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு எந்தவித விலை மாற்றமும் இல்லாமல் தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News