கருடசேவை விழாவில் வீசப்பட்ட பல டன் குப்பை: அகற்றிய பணியாளர்கள் !

காஞ்சியில் நடைபெற்ற கருட சேவை விழாவில் வீசப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர்.;

Update: 2024-05-25 05:09 GMT

புகழ்பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் தங்க கருட வாகன சேவையை காண இன்று அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் அலைகடலென திரண்டு லட்சக்கணக்கான மக்கள் இன்று காஞ்சி வரதரின் நகரின் பல முக்கிய சாலையில் வழியாக சென்ற நிலையில் தரிசனம் மேற்கொண்டனர். கருட சேவை நிகழ்வை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் தங்களால் இயன்ற குளிர்பானங்கள் உணவுகள் என பொதுமக்களுக்கு பசியும் மற்றும் தாகத்தை தீர்க்கும் வகையில் அளித்து செயல்பட்டதன் விளைவாக காஞ்சிபுரம் முழுவதும் குப்பைகளாக கூளங்களாக காட்சியளித்தது.

Advertisement

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மேயர் மகாலட்சுமி, ஆணையர் என பலர் நேரில் அறிவுரை , ஆலோசனை வழங்கினார் .இதை தொடர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து சாமி வீதியுலா உடன் சென்று தூய்மைப்படுத்தியபடியே சென்றதன் விளைவாக சில மணி நேரங்களிலேயே தூய்மை காஞ்சி ஆக தென்பட்டது. பல லட்சம் டன் குப்பைகளை உடனடியாக அகற்றி சுகாதாரத்திற்கு பெரிதும் உதவிய தூய்மை காவலர்களின் பணி என்றும் அளப்பரியது. தூய்மை காவலர்களின் துரித பணி மற்றும் அயராத சேவையை காஞ்சி மக்கள் மட்டுமல்லாது இன்று காஞ்சிக்கு வந்த அனைத்து நபர்களும் பாராட்டி சென்றனர்.

Tags:    

Similar News