தாளவாடி பகுதியில் சாரல் மழை
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் சாரல் மழை.
Update: 2024-04-02 04:59 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுக்கிறது. காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் 3 மணியளவில் தாளவாடி கரளவாடி இக்ளூர் மகாராஜன் புரம் பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன சில நிமிடங்கள் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 15 நிமிடம் சாரல் மழை நிற்காமல் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.