குமரியில் பழுதடைந்த சுற்றுலா படகு மீண்டும் இயக்கம்

குமரி படகு துறையில் பழுதான படகு சீர்செய்து மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-10-22 13:53 GMT

படகு சவாரி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகுபழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை கரையேற்றி ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து குகன் படகு  சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கடந்த 5-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு குகன் படகு கரையேற்றப் பட்டு சீரமைக்கும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் இருந்து இறக்கி கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. 

அதன் பிறகு கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி குகன்படகு புதுப் பொலிவுடன் நேற்று முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News