கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி
Update: 2023-11-24 02:51 GMT
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை பூங்காவில் நேற்று அதிகப்படியான நீர்வரத்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் இன்று நீர்வரத்து குறைந்த நிலையில் அணையில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.