ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒகேனக்கல்லில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு கர்நாடகா ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் அருவிகளில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
இந்நிலையில் சமீப காலமாக ஒகேனக்கலில் நீர்வரத்து சரிந்து வறண்டு காணப்பட்டு நிலையில், தமிழகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 1200 கன அடி வீதம் நீர் வரத்து வரத் துவங்கியது இதனை அடுத்து நேற்று வினாடிக்கு 900 கனஅடியாக நீர்வரத்து இருந்தது இதனால் மெயின் அருவி,சினி பால்ஸ்,ஐந்தருவி, தொங்கும் பாலம்,பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.