கொடைக்கானலில் பேருந்து ரத்து: சுற்றுலா பயணிகள் அவதி
முதல்வர் வருகை காரணமாக இன்று கொடைக்கானலில் இருந்து பழனி பேருந்து நிலையத்துக்கு பேருந்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 15:18 GMT
கொடைக்கானல் பேருந்து நிலையம்
பழனி பேருந்து நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. இன்று முதல்வர் வருகை காரணமாக கொடைக்கானலில் இருந்து பழனி பேருந்து நிலையத்துக்கு பேருந்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது. மதிய நேரங்களில் கொடைக்கானலுக்கு செல்லும் பேருந்து ரத்து செய்யப்பட்டது.
பேருந்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.