பூலாம்பட்டி படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி

விடுமுறை நாட்கள் என்பதால் பூலாம்பட்டி படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

Update: 2024-02-04 16:17 GMT

சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

பூலாம்பட்டி காவிரி ஆற்று படகுத் துறையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம்... சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவேரி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  இதனால் காவேரி ஆற்று நீர் பறந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கிறது. 

காவேரி கரையோர பகுதியான நெருஞ்சிப்பேட்டை,பூலாம்பட்டி,கூடக்கல், குப்பனூர் பகுதிகளை இணைத்து மலைச் சார்ந்த பகுதியாக பசுமையான இயற்கை ரம்யமான காட்சி அளிப்பதால் இதனை குட்டி கேரளா என அழைக்கப்படுகிறது.  சேலம் மாவட்டம் பூலாம்பட்டி,ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சேலம் மற்றும் ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து வந்து படகு சவாரி செய்து இயற்கையான சூழலை ரசித்து செல்கின்றனர்.  

இந்த நிலையில் நேற்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் பூலாம்பட்டி கதவனைப் பகுதியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது என்பதால் சுற்றுலா பயணிகள் சற்று அதிகமாக குடும்பத்துடன் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் தொடர்ந்து பூலாம்பட்டி படகு துறை அருகே அமைந்துள்ள மீன் கடைகளில் பொறித்த மீன்களை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாங்கி சுவைத்து சென்றனர்.

இதனால பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதி மற்றும் மீன் கடைகளில் கலை கட்டியது.

Tags:    

Similar News