தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வியாபாரி கைது
நித்திரவிளை அருகே கடையில் பதுக்கி வைத்து புகையிலை விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-25 15:19 GMT
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கலிலேயபுரம் பகுதியை சேர்ந்த சுகுமாரன்.இவர் காஞ்சாம் புறம் பகுதியில் மசால் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா புகையிலை பதுக்கி வைத்து பண்டல் அளவில் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் துறை நிர்வாகத்திற்கு புகார் கிடைத்தது.இதை அடுத்து மாவட்ட தனிப்படை எஸ்.ஐ இம்மானுவேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சுகுமாரனுக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தனர்.
அப்போது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 கிலோ எடை உள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் உரிமையாளர் சுகுமாரன் என்பவரையும், பறிமுதல் செய்த புகையிலை பொருட்களையும் நித்திரவிளை போலீசில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுமாரனை கைது செய்தனர்.