கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.77.19 லட்சத்திற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 77.19 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Update: 2024-06-04 04:46 GMT

விற்பனைக்கு வந்த விளைபொருட்கள் 

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, எள் 600 மூட்டை, மக்காச்சோளம் 400, தலா 5 மூட்டை நாட்டு கம்பு, எச்.பி.கம்பு, உளுந்து 3, வேர்க்கடலை 2, ராகி 1 உட்பட 1028 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 11,100 ரூபாய், மக்காச்சோளம் 2,399, நாட்டு கம்பு 4,534, எச்.பி.கம்பு 2,304, உளுந்து 7,299, மணிலா 7,422, ராகி 3,540 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 77 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 140, எள் 3 என 143 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,400, எள் 8,799 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 496 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் எள் 120, நெல் 110, கம்பு 12, சோளம் 11, உளுந்து 10, தலா ஒரு மூட்டை பச்சைப்பயிர், தட்டைப்பயிர், ராகி, என 266 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை எள் 13,245 ரூபாய், நெல் 2,480, கம்பு 4,089, சோளம் 2,319, உளுந்து 9,319, பச்சைப்பயிர் 3,589, தட்டைப்பயிர் 2,589, ராகி 3,161 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News