விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா
சேந்தமங்கலம் விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா. சிறப்பு விருந்தினராக -பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் பங்கேற்பு
By : King 24x7 Angel
Update: 2024-02-07 12:18 GMT
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பொன்னம்மா புதூரில் செயல்பட்டு வரும் விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உணவு திருவிழாவை ஏற்பாடு செய்து வருகின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக பிரபல சித்த மருத்துவர், தீவிர சூழலியல் செயல்பாட்டாளர், உணவியல் ஆய்வாளர், நம் பாரம்பரிய உணவுமுறையை வாழ்வியல் நெறிகளை மீட்டெடுக்கும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படுபவர், மத்திய அரசின் 12-ஆவது திட்டக்குழுவில் சித்த மருத்துவத்துக்கான ஆலோசகர், சமூகஆர்வலர். இன்னும் பல அடையாளங்களைக் கொண்டவர் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்று அன்று மாலை நடைப்பெறும் விழாவில் "இன்றைய சூழலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பாரம்பரிய உணவும் ஊட்டச்சத்தும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த பாரம்பரிய உணவு திருவிழா வருகிற பிப்ரவரி 10 மற்றும் 11 (சனி/ ஞாயிறு) பள்ளி வளாகத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் பாரம்பரிய விதைகள், அரிசி, பருப்பு வகைகள், மூலிகை வகைகள் ,மற்றும் சிறுதானியங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. செக்கு எண்ணெய், தமிழகத்தில் உள்ள மலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேன் வகைகள், மரபு திண்பண்டங்கள் , விளையாட்டு பொருட்கள் இடம் பெறுகின்றன.மேலும் உணவு தானியங்களில் எப்படி மதிப்பு கூட்டி விற்பனை செய்வது என்று விளக்கம் அளிக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் தொழில் முனைவோர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சியில் இடம் பெறுகின்றன. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உழவு கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. குழந்தைகளை கவர பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.