அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
குமாரபாளையம் காலை நேரத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வழியாக எஸ்பிபி காலனி பேருந்து நிறுத்தம் வரை சென்று திரும்பும் வகையில் அரசு பேருந்து ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து எஸ்பிபி காலனி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது காவேரி ஆர் எஸ் என்ற பகுதி அருகே எதிர்பாராத விதமாக, அரசு பேருந்து பழுதாகி நின்றது . எவ்வளவோ முயன்றும் அரசு பேருந்தின் ஓட்டுநர் பேருந்து இயக்க முற்பட்டும் பேருந்து நகரவே இல்லை.
இதனை அடுத்து பேருந்து நடத்துனர், உள்ளூர் பொதுமக்கள், பேருந்தில் பயணித்த பயணிகள், உள்ளிட்டோர் அரசு பேருந்தை முன்னும் பின்னும் ஆக தள்ளி இயக்க வைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் போராடியும் பேருந்து இயக்க முடியாததால், அப்பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏறி சென்றனர். இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அப்பேருந்து சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஈரோடு சென்றது . இந்த காட்சிகளை அங்கிருந்து ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வேகமாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது..