சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான கிரேன் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்தவர் அசோக் என்பவரின் மகள் கல்லூரி மாணவியான சுஷ்மா (17 வயது).கடந்த 24ஆம் தேதி உடுமலை சாலை தேர் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கிரேன் மோதியதில் உயிரிழந்தார்.விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் ஓட்டுநர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களாகியும் கிரேன் ஓட்டுனரை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை கூறி. சுஷ்மாவின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டு கல்லூரி மாணவிக்கு நீதி வேண்டி கோஷங்களும் எழுப்பினர்.இதனால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் சம்பவம் இடத்திற்க்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் கிரேன் ஓட்டுநரை கைது செய்யும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவ்வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.