சூறாவளியால் சாலையில்  சாய்ந்த ராட்சத மரம்

தடிக்காரன்கோணம் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் ராட்சத மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-05-25 11:11 GMT

குமரியில் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தடிக்காரன்கோணம், புதுக்கிராமம், வாழையத்து வயல், கீரிப்பாறை, காளிகேசம் மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராமங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.  

   அது போன்று பலத்த சூறாவளி காற்றும் அடித்தது. இதன் காரணமாக இன்று காலை தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலையில் காமராஜபுரம்  சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.       இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடம்  வந்த குமாரி வனத்துறையினர், சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை அப்பகுதி மக்கள் உதவியுடன் அகற்றினர். இதன் காரணமாக காலையில் சுமார் 4 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News