போக்குவரத்து போலீசார் தலைக்கவச விழிப்புணர்வு பிரச்சாரம்

Update: 2023-11-08 11:06 GMT

விழிப்புணர்வு  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறையில் போக்குவரத்து காவல்துறையினர் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  மயிலாடுதுறை கடைவீதி யில் தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்குவதற்கு அதிக அளவில் பைக்கில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகன் மற்றும் போலீசார் கிட்டப்பா அங்காடி பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு விளம்பர வாகனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி, கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் இயக்க வலியுறுத்தினர்.
Tags:    

Similar News