டூவிலரில் கஞ்சா கடத்தல்

குளத்து பாளையத்தில் டூவீலரில் கஞ்சாவை கடத்திய இளைஞர் கைது.ரூ.12,000- மதிப்புள்ள கஞ்சா, டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-06-28 15:31 GMT

கஞ்சா கடத்தல்

 கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சாவை கடத்தி வருவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜூன் 27ஆம் தேதி மதியம் 2:30- மணி அளவில், மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், கரூர் அடுத்த குளத்து பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, டூவீலரில் வேகமாக வந்த வெங்கமேடு, செல்வ நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் ஜோகிந்தர் வயது 23 என்பவரை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சோதனை இட்டபோது, விற்பனை செய்யும் நோக்கில் ரூபாய் 12,000- மதிப்புள்ள 1,020 கிராம் கஞ்சாவை கடத்திச் சென்றதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News