நேர்த்திக்கடனால் நேர்ந்த சோகம்: மலை உச்சியில் சிறுவன் பலி
ராணிப்பேட்டை பகுதியில் நேர்த்திக்கடன் செலுத்த சென்ற இடத்தில் வெயிலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 16:32 GMT
குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற 14 வயது சிறுவன் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் டி.சி.குப்பம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சத்யா, மனைவி வெண்ணிலா, இரண்டு மகன்கள் ஹர்ஷன், பரத் ஆகியோருடன் நத்தம் பகுதியில்,
மலை உச்சியில் உள்ள மூங்கில் வாழி அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்றுள்ளார். அடிவாரத்தில் இருந்து நடந்து சென்ற போது, மூத்த மகன் ஹர்ஷன் திடீரென மயங்கிய நிலையில், மருத்துவமனையில் பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.