இந்திய தண்டனைச் சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு
விருதுநகர் மாவட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய நாகரிக் சாக்ஷிய ஆதினியம் (BSA) ஆகிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்படி சட்டங்கள் எதிர்வரும் 01.07.2024ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.கா.பெரோஸ்கான் அப்துல்லா , பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.