ராமநாதபுரம் : தொழில்முனைவோருக்கான பயிற்சி

ராமநாதபரத்தில் தொழில் முனைவோருக்கான 1 மாதம் மற்றும் 3 மாத கால திறன்மேம்பாட்டு இலவச பயிற்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Update: 2023-12-16 09:27 GMT

தொழில்முனைவோருக்கான பயிற்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபரத்தில் தொழில் முனைவோருக்கான 1 மாதம் மற்றும் 3 மாத கால திறன்மேம்பாட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC), சென்னை மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) இணைந்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியின் விபரங்கள்: 1. பனை ஓலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 1 மாதம், 2. கடல் சிப்பியினால் தயாரிக்கப்படும் பொருட்கள் 3 மாதங்கள் ஆகும். இப்பயிற்சியில் தரமேலாண்மை மற்றும் பேக்கேஜிங் (Packaging) முதலியவற்றில் தகுந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. "ஏற்றுமதி இறக்குமதி" செய்வது பற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் சுற்றுத்தரப்படும். அந்தந்த துறையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். விருப்பமுள்ளவர்கள் 18 முதல் 35 வரை வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இப்பயிற்சியின்போது மாதத்திற்கு ரூ. 12,500/- உதவித்தொகை வழங்கப்படும். தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி கையேடு தரப்படும். பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.sippo.org.in என்ற இணையதளத்திலும், 8778225304 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News