மாணவர்களுக்கு கைகழுவும் முறை குறித்த செயல்விளக்கப் பயிற்சி

தூத்துக்குடி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-07-03 10:00 GMT

தூத்துக்குடி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.


தமிழ்நாடு சமூகத் தணிக்கை சங்க அலகின் சார்பில்  தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கப் பயிற்சி தலைமையாசிரியர் மரிய ஜோசப் அந்தோணி தலைமையில் அளிக்கப்பட்டது. சமூகத்தணிக்கை வட்டாரவள பயிற்றுனர் முத்துமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கைகழுவும் முறை குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தார். 

இதில் சமூகத் தணிக்கை வழி நடத்தும் குழுவினர் ஞானசேகர், மாரியம்மாள், பெரிய சுதா, முருக செல்வம், அணிஸ் ராணி, தமிழ்ச்செல்வி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு முன்பாக கைகளை சோப்பு போட்டு கழுவும் முறை குறித்தும்,  சுகாதார பழக்கங்களை மேற்க்கொள்வது குறித்தும் செயல்விளக்கப்  பயிற்சி அளிக்கப்பட்டது.சுகாதார கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News