காட்டுத் தீயை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு பயிற்சி !
ஒரகடத்தில், காட்டில் ஏற்படும் தீ விபத்தினை கட்டுப்படுத்த, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை இணைந்து, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-11 10:10 GMT
ஒரகடத்தில், காட்டில் ஏற்படும் தீ விபத்தினை கட்டுப்படுத்த, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை இணைந்து, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதுார் அடுத்த, ஒரகடம் வனப்பகுதியில், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து, காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், காட்டுத் தீ ஏற்படும் போது செய்ய வேண்டி வழிமுறைகள் குறித்தும் கல்லுாரி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியை அளித்தனர். இதில், ஸ்ரீபெரும்புதுார் வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஒரகடம் தீணைப்பு தீயணைப்புத் துறை வீரர்கள் பங்கேற்று, ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களை வனத்துக்கு அழைத்து சென்று, காட்டுத் தீ எதனால் ஏற்படுகிறது, ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், ஏற்பட்டால் எவ்வாறு தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.