உப்பு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மேம்படுத்த பயிற்சி

கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உப்பு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மேம்படுத்தும் விவசாய பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-03-10 13:44 GMT

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

நாகை மாவட்டம்    கீழ் வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாகை மாவட்ட நபார்டு இணைந்து   உப்பு மண்ணாள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மேம்படுத்தும் வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாய  பயிற்சி கடந்த 8ம் தேதி தொடங்கி பயிற்சி நாளை மற்றும் நாளை மறுநாளும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பயிற்சியின் தொடக்க நிகழ்சியில். பயிற்சியை வேளாண் கல்லூரி முதல்வர்  ரவி தலைமை தாங்கினார்.   . நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குனர்  தேவேந்திரன்,   நபார்டு வளர்ச்சி மேலாளர்   விஸ்வந்த்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் மண்ணியல பே ராசிரியா அனுராதா வரவேற்றார்.

வேளாண் விரிவாக்கத்துறையை  சேர்ந்த  தாமோதரன்  உப்பு மண்ணில் விவசாய வாழ்வாதாரம் மேம்படுத்துதல் குறித்தும்,    மரபியல் மற்றும் இனப்பெருக்கவியல் துறை உதவி பேராசிரியர்  நாராயணன். வேளாண் பயிர் ரகங்கள் தேர்வு செய்யும் முறைகள் பற்றிய  தொழில்நுட்பங்களை  உதவி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயற்சி அளித்தனார்.

இப்ப பயிற்சியில் 25 மேற்பட்ட விவசாயி கள்  கலந்து கொண்டனர்.  வேளாண்மை பேராசிரியைகள்  வனிதா, அனுராதா மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் ஜீவன்ராஜ், 

 பொன்னார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   படவிளக்கம்              படம் 1 கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உப்பு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மேம்படுத்தும் விவசாய பயிற்சி கீழ் வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

Tags:    

Similar News