தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் மூலம் பயிற்சி

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் அதிவேக தண்ணீர் பாய்ச்சும் போர்ட்டபிள் எந்திரம் வாங்கப்பட்டது. 1500 rpm திறன் கொண்ட இந்த எந்திரம் அதிக வேகத்தில் தண்ணீர் பாய்ச்சும்.

Update: 2024-04-24 09:18 GMT

தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் 

திண்டுக்கல் பழனி சாலை முருக பவனத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பிரிக்க முடியாத சாக்கடை மணல் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த கழிவுகளில் உருவாகும் அம்மோனியம் வாயு எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை உடையது. திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது இதனால் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரியும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஏழாம் தேதியில் இருந்து தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது. இதனை அடுத்து தீயணைப்புத்துறை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புகைமூட்டத்தால் அப்பகுதி முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த தொடர் தீ பற்றுவதை தடுக்கவும் தீயை அணைக்கவும் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் அதிவேக தண்ணீர் பாய்ச்சும் போர்ட்டபிள் எந்திரம் வாங்கப்பட்டது. 1500 rpm திறன் கொண்ட இந்த எந்திரம் அதிக வேகத்தில் தண்ணீர் பாய்ச்சும்.
Tags:    

Similar News