திருநெல்வேலியில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

திருநெல்வேலியில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-07-02 14:38 GMT

மாவட்ட ஆட்சியர் 

திருநெல்வேலி மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 11 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (ஜூலை 1) உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் செல்வன் அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை தனி மாவட்ட வருவாய் அலுவலக கண்காணிப்பாளர் கந்தப்பன் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று சிப்காட் நிறுவன நில எடுப்பு (அலகு 4) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News