தளபதி விஜய் தமிழக முதல்வராக வேண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பேரணி

குளித்தலை தொகுதி தவெக உறுப்பினர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு;

Update: 2024-11-29 04:09 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை ஒன்றியம் நாகனூர் பகுதி தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் ராமன், லட்சுமணன், கனகராஜ், தேவராஜ் ஆகியோர் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் 2026 ல் தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க வேண்டி சிறப்பு பூஜை செய்வதாக பேனர் ஏந்தியவாறு ஐயப்பன் கோவில் வளாகத்தில் இன்று பேரணியாக வரும் காட்சியை குளித்தலை தொகுதி தவெக நிர்வாகிகள் சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர்.

Similar News