சூறைக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்தன

மாங்காமலை,மூக்கரைகல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றால் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கின.

Update: 2024-06-29 07:22 GMT

மாங்காமலை,மூக்கரைகல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றால் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கின.


குமரி மாவட்டத்தில் கடந்த 26-ந் தேதி மலைப் பகுதிக ளான கீழ்கோதையாறு, மாங் காமலை, முடவன் பொற்றை, மூக்கறைக்கல், தச்சமலை, களப்பாறை உள்ளிட்ட இடங் களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையுடன் சூறைக்காற் றும் வீசியதால் மின்பாதை களில் மரங்கள் முறிந்து விழுந் தன. இதில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின.இதையடுத்த மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை முதல் அந்த பகுதிகளில் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை. ஒரு சில இடங்களில் இரவில் மின்சாரம் வந்தபோதும் சிறிது நேரத்தில் அது தடைப் பட்டது.இந்தநிலையில் மின்சார வாரிய ஊழியர்கள் 2-வது நாளாக நேற்று காலையில் முதல் மீண்டும் சீரமைப்பு பணிகளை தொடங்கினர். எனினும் முழுமையான அள வில் அனைத்து கிராமங்களுக் கும் மின்சாரம் வரவில்லை யென பழங்குடி மக்கள் கூறு கின்றனர். எனவே இன்று பணிகளை விரைந்து முடித்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News