திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம் !
விருதுநகர் அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் வீடு கட்ட நிதி வழங்காததை கண்டித்து திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-05 05:09 GMT
விருதுநகர் அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் வீடு கட்ட நிதி வழங்காததை கண்டித்து விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நான்கு வழிச்சாலையை மறித்து திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 38 திருநங்கைகளுக்கு தலா 2.5 சென்ட் திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் பகுதியில் 13 திருநங்கைகளுக்கும் வீடு கட்ட கடந்த 2012 ஆம் ஆண்டு அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநங்கைகள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் திங்கள் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த திருநங்கைகள் 30க்கும் மேற்பட்டோர் மதுரை திருநெல்வேலி நான்கு வழிசாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.போலீசாரின் சமரசப் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.