கலிமா நகரில் மரக்கிளை விழுந்தது
கடலூர் மாவட்டம், கலிமா நகரில் மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
Update: 2024-06-05 17:35 GMT
மரக்கிளை முறிவு
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கலிமா நகரில் அல் ஹரம் மளிகை கடை அருகில் உள்ள மரக்கிளை விழுந்து விட்டது.
இந்த பக்கம் வழியில் பைக் கூட போக முடியாது ஆகையால் வாகன ஓட்டிகள் அனைவரும் மாற்று வழி ( கலிமா பள்ளி வாசல் வழியாக செல்லுமாறு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மரத்தினை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.