மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
Update: 2024-06-05 09:55 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கே.காளிதாஸ், தலைமை ஆசிரியர் சுதா, லயன் சுரேஷ், லயன் மனோஜ்குமார் ,மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, பள்ளித்துணை ஆய்வாளர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.