மேட்டூரில் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-14 16:09 GMT

வங்கி முன் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு செட்யூல்டு பேரவை சார்பில்  ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இதில்  மேட்டூர் அருகே மலை கிராமமான பாலமலைக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும், 

பாலமலையில் பழங்குடி மாணவர்களின் நலன் கருதி ஏகலைவா பள்ளியை அமைத்து தர வேண்டும், பழங்குடியினர் நிலம் பழங்குடியினருக்கு என்ற அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும், மேட்டூர் பகுதியில் பழங்குடியினர் அல்லாத மாற்று சமூகத்தினர் வாங்கிய விவசாய நிலங்களை பறிமுதல் செய்து மீண்டும் மலையாளி மக்களுக்கு வழங்கி அரசாணை அமல்படுத்த வேண்டும்,

மலையாளி மக்களுக்கு ஐந்து சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News