ராசிபுரத்தில் பெரியாருக்கு நினைவஞ்சலி
இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியாருக்கு 50 ஆவது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு திராவிட விடுதலைக் கழகத்தின் நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா தலைமை வகித்தார்.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அவரது புகழை கோஷங்களாக எழுப்பி முழக்கங்கள் இட்டனர்.
தொடர்ந்து தந்தை பெரியாரின் பல்வேறு சீர்திருத்த திட்டங்களையும் நினைவு கூர்ந்து அவர் செய்த பல்வேறு தொண்டுகளையும் எடுத்து கூறினர். தமிழ்நாடு தமிழர்க்கே என்று முழங்கி, இந்த மக்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திர இழிவுப் பட்டத்தை, இழி நிலையைப் போக்க தன் இறுதி மூச்சு வரை போராடிய போராளித் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 50 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்கவில் சிறப்பு அழைப்பாளராக நகர வளர்ச்சி மன்ற தலைவர் வி.பாலு, வழக்கறிஞர் கைலாசம், மற்றும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.