சவுக்கு சங்கா் மீது திருச்சியிலும் 5 பிரிவுகளில் வழக்கு

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் மீது திருச்சி போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2024-05-08 13:38 GMT

 பைல் படம்

போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீஸாா் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசியிருந்த சவுக்கு சங்கா் மீது கோவை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில் திருச்சியை சோ்ந்த பெண் காவலா் ஒருவா் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாரும் சவுக்கு சங்கா் மீது செவ்வாய்க்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனா்.


Tags:    

Similar News