ஆன்லைன் மூலம் ரூ.9 லட்சம் மோசடி
திருச்சியில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இளைஞரை ஏமாற்றிய பெண்ணை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Update: 2024-03-15 05:15 GMT
திருச்சி ஆர். எஸ். புரம் இரண்டாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஆன்லைன் மூலம் வேலை தேடினார். அப்போது குஜராத்தில் இருந்து பேசிய பெண் ஒருவர் கூகுள் மேப் ரிவ்யூ செய்வதன் மூலம் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என பேசினார். அதன்படி அவர் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் என கிடைக்கும் என அந்த பெண் கூறியுள்ளார். இவர் 4, 000 முதலீடு செய்தார். அதற்கு 5520 ரூபாய் பணம் கிடைத்துள்ளது. இதனால்அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்ட செந்தில் 9 லட்சத்து 7 ஆயிரம் பணத்தை திரும்ப முதலீடு செய்தார். ஆனால் அதற்கு பதில் கூடுதல் தொகையும், அசல் தொகையும் வரவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் சைபர் கிரைம்போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.