திருச்சி உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் திருவிழா 15-ந் தேதி நடைபெறுகிறது

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு, விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறவுள்ளன

Update: 2024-03-11 11:10 GMT

 வெக்காளியம்மன் கோயில்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்குகிறது. மேளதாளங்கள் முழங்க கோயில் நிா்வாகம் சாா்பில் கொண்டு வரப்பட்ட முதல் பூக்கூடையால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வரும் பூக்களால், அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. பக்தர்கள் சங்கத்தின் சாா்பில் பூக்களை ரதத்தில் எடுத்துச் சென்று அம்மனுக்கு பூஜை செய்யும் வைபவமும் நடைபெறும். இதேபோல பல்வேறு அமைப்புகளும் பூக்கூடைகளையும், பூத்தட்டுகளையும் சுமந்து வந்து அம்மனுக்கு நத்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் ம. லட்சுமணன், செயல் அலுவலா் நா. சரவணன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ஊா்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News